எங்கள் சொந்த பயணத்தை மேற்கொள்வதற்காக ரணசிங்க பிரேமதாச பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பு மாற வேண்டும் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.’நாங்கள் ஆட்சியைப் பிடித்து விட்டால் மட்டும் இந்த நாடு வளர்ச்சியடைந்து விடாது.

ஒருபுறம் பொருளாதார நிபுணர்கள் உள்ளனர். எங்களிடமும் ஒரு சிறந்த குழு உள்ளது.  இரு தரப்பிலிருந்தும் இந்த நாடு வளர்ச்சியடையவில்லை.ஏன் வளர்ச்சியடையவில்லை?. ஊழல் மற்றும் துஷ்பிரயோகம். பொறுப்பு இல்லை.

ஒரு பக்கம் நாட்டின் உற்பத்தி இல்லாமல் நாடு உயராது. மறுபுறம் ஊழல். நமது கட்சி மாற வேண்டுமானால் இவற்றைப் புரிந்து கொண்டு இந்த வழியில் செயல்பட வேண்டும்.தலைவர் இங்கே இருந்திருந்தாலும் இந்தச் செய்தியை இப்படித்தான் சொல்வேன்.

இனி ரணசிங்க பிரேமதாச என்ற பெயரைக் கூட நீங்கள் குறிப்பிடக் கூடாது என நான் பதுளையில் அவரிடம் கூறினேன். ஏனென்றால் அவை எதுவும் இப்போது நமக்குத் தேவையில்லை. நாம் நிச்சயமாக நமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் நமது தலைவர்களை உருவாக்க வேண்டும்.