ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பன அழைப்பு விடுத்தால்கூட அக்கட்சிகளில் இணையும் எண்ணம் எமக்கு இல்லை – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மேற்படி கட்சிகளுக்கும் எமது கொள்கைகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. அக்கட்சிகளுடன் பேச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அழைப்பு வந்தால்கூட இணைந்து பயணிக்கும் திட்டம் இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதியை சந்திக்கவும் நாம் விரும்பவில்லை. பிரதமரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவரை உரிய நேரத்தில் சந்திப்போம்.
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கம்தான் நாம் அமர்வோம்.” – என்றார் அமைச்சர் வாசு.
இணைந்திருங்கள்