நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமரமாட்டோம். அரச பக்கம் இருந்தே சுயாதீனமாக செயற்படுவோம். “- என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கம் முன்வரிசையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் மாறியுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விமல் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
அதேவேளை, கம்மன்பில போன்றவர்கள் தனது அமைச்சை உரிய வகையில் செய்யாமல் ஏனைய எல்லா அமைச்சுகளையும் செய்யவே முற்பட்டனர் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்ன குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்