வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், மீண்டும்  சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள், கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

அதேவேளை வட்டரெக்கசிறைச்சாலையில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 சிறைக்காவலர்கள் மற்றும் 10 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது