தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,” ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.

எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம். அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே ஆளட்டும்.

அவருக்கு எமது பண்பான வாழ்த்துகள்ரணிலுக்கு இழக்க எதுவுமில்லை..!எமது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஆட்சி பொறுப்பை ஏற்காமைக்கு காரணம், பிரதான எதிரணியான எமது கொள்கை கோட்பாடுகள்.

நமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. நாம், எமது தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் அணி. எமது மக்களை நாம் நேரடியாக பிரதிநிதித்துவம் செய்கிறோம்.இந்த நிமிடம்கூட, எமது அரசியல்குழு முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம். இதற்கான அழைப்பு எமக்கு எப்போதும் இருக்கிறது.

இதை அனைத்து தரப்பினரும் மனதில் கொள்ள வேண்டும்.ஆனால், அதை நாம் செய்யவில்லை.

மாறாக வெளியிலிருந்து பிரதமரை, எமது “முன்னாள் பிரதமரை” வாழ்த்துகிறோம்.தற்சமயம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, நாம் எதிரணியில் இருக்கிறோம். நடப்புகளை அவதானித்து பொறுப்புடன் கட்சியாக பயணிக்கிறோம்.