நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இந்த வேளையில் தேர்தல் நடத்துமாறு கோருவரு அர்த்தமற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க தாம் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்