ராஜபக்சக்களை பாதுகாத்து, நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கமீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

” மாற்று வழியின்றி, பதவி விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராக இருந்தார். கோட்டா விலகினால்தான் ஆட்சி பொறுப்பேற்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன திட்டவட்டமாக அறிவித்தன. எனினும், எவ்வித நிபந்தனையும் இன்றி, பிரதமர் பதவியை ஏற்று, கோட்டாவை ரணில் பாதுகாத்தார். கோல் பேஸ் போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்தார்.

தற்போது கோல்பேஸ் போராட்டக்காரர்களை பிளவுபடுத்தும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். தான் உண்மையை பேசுவதாக கூறும் ரணில், முடிந்தால் ராஜபக்சக்களுடனான டீல் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார் சாணக்கியன்.