முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று வாசிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமா அதிபர் திணைக்களம் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

விமல் வீரவங்ச 2010-15ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த காலத்தில் தனது சம்பளம் மற்றும் ஏனைய சொத்துக்களால் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றில் முன்னிலையான பிரதிவாதி விமல் வீரவங்ச, தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தாம் குற்றவாளி அல்ல என தெரிவித்துள்ளார்.

வழக்கை ஜூன் 28ம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.