உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், தமது விஜயத்தின் போது இலங்கையின் முறையான ஊழல் விவகாரத்தை சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியம் அவ்வாறு செய்யத் தவறினால், உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு மாறாக, ஊழல் அரசியல்வாதிகள் பிணையில் விடுவிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலான ஆட்சியே பிரதான காரணம் என பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் Mark Malloch-Brown இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதித்துடன் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தின் நிகழ்ச்சி நிரலில் பிரச்சனை சேர்க்கப்படுமா என்று டி மெல் மேலும் கேள்வி எழுப்பினார்.