அம்பலாங்கொடை பிரதேசத்தில் விசேடதேவையுடைய 24 வயது பெண் ஒருவரை 14வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிறந்ததில் இருந்தே விசேட தேவை உடைய குறித்த யுவதிக்கு, 8 வயதாக இருக்கும் போது, தாய் அவரை விட்டுச் சென்றுவிட்டார் எனவும், அதன்பின், தனது தந்தையினது அரவணைப்பில் வசித்து வருகிறார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது

பேருந்து நடத்துநராக பணிபுரியும் தந்தை பணியின் நிமித்தம் வெளியே செல்லும் போது, விசேடதேவையுடைய தனது மகளை வீட்டுக்குள் தனிமையில் விட்டு கதவினை பூட்டிவிட்டு செல்வதனை வழமையாக்கி வந்துள்ளார்.

குறித்த யுவதினை கவனிப்பதற்கு எவரும் இல்லாத காரணத்தால், இவ்வாறு அவரை தனிமையில் விட்டு சென்றுள்ளதாகவும், அதன் போதே அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 14 வயது சிறுவன் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.