கொழும்பில் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் தற்போது படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் பகுதிக்கு நுழையும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத் திடல் கோட்டாகோகமவில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.

தற்போது போராட்டக்காரர்களை தாக்கி அந்த இடத்தை விட்டு விரட்டியடித்த படையினர் ஜனாதிபதி செயலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பி.பி.சி. செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத் திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளர். பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.