நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் 15 ஆயிரத்திற்கும் குறைவான டொலர் இருக்குமாக இருந்தால், அவற்றை வங்கிகளில் வைப்புச் செய்ய முடியும். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம், ரூபாவாக மாற்றும்போது டொலர் ஒன்றுக்கு, 10 ரூபா வீதம் மேலதிக பெறுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.