ஜூலை 9 அன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டத்தின் போது நுழைந்த மூன்று பேர், ஜன்னல் திரைகளைத் தொங்கவிட சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை சாக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
நேற்று திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் சந்தேகநபர்களை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்த பல பொருட்கள் திருடப்பட்டுய்யது.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளும் கொழும்பு (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர்
இணைந்திருங்கள்