பொதுவாக எமது வீடுகளில் இருக்கும் முன்னோர்கள் சமைக்கும் போது சில நுட்பமுறைகளை கையாள்வார்கள். இது நன்றாக சமைக்க தெரிந்த சிலருக்கு மட்டுமே தெரியும். இதுவே சமையல் சுவையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. இதன்படி, சமைப்பதிலுள்ள சில நுட்பமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.

எமது வீடுகளில் காளான்கள் சமைப்பார்கள். இது காய்கறி வகையை சார்ந்தாலும் சாப்பிடும் போது மாமிச சுவையை தருகிறது. இந்த காளானை சமைக்கும் போது அலுமினியம் பாத்திரங்களில் சமைப்பதை முற்றாக தடுக்க வேண்டும். ஏனென்றால் இதிலுள்ள சில பதார்த்தங்களை பாத்திரத்தை கருமையாக மாற்றும்.

சமைக்கும் போது சாம்பார் உள்ளிட்ட குழம்புகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால் தக்காளிப்பழம் அல்லது உருளை கிழங்கை சிறு சிறு தூண்டுகளாக வெட்டி குழம்புடன் சேர்த்துவதால் காரம் மற்றும் உப்பு சரிச் செய்யலாம்.

பண்டிகை தினங்களில் பல இனிப்பு வகைகள் செய்வார்கள் அதில் ஒன்று தான் ரவா லட்டு. இதனை செய்யும் போது அதனுடன் அவலை நன்றாக பொடிக்கி, நெய்யில் வறுத்துச் சேர்த்து, இதனுடன் பால் பவுடரையும் கலந்து ரவா லட்டை தயாரித்தால் சுவையும் மணமும் அள்ளும்.

வீட்டில் அதிகமான தக்காளிப்பழம் இருந்தால் தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற வகைகளில் உணவு தயார்க்கலாம். இதில் சூப் தயாரிக்கும் போது வேக வைத்த பீட்ரூட் துண்டை சூப்பில் போட்டால் தக்காளி சூப்பிலிருந்து வரும் மணம் மற்றும் வித்தியாசமாக இருக்கும்.

கடையிலிருந்து வரும் சில காய்கறிகள் இரண்டு நாட்களின் பின்னர் வாட ஆரம்பிக்கும். அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு களஞ்சிய முறைகள் உள்ளன. அந்த வகையில் பலரால் விரும்பி எடுத்துக் கொள்ளும் காய் வகைகளில் ஒன்றான கத்தரிக்காய் கடையிலிருந்து வந்தவுடன் ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் கத்தரிக்காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.