இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகியுள்ள வளிமண்டல தளம்பல் நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்றும் கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.