ஞானசாரரை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட தேரர்கள் போராட்டம், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையல்ல. மாறாக, ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் போராட்டம் என மக்கள் அறிந்துள்ளனர்
இந்தப் போராட்டத்தில் பௌத்தத் தன்மையோ, புத்த தர்மத்தைப் பாதுகாக்கும் நோக்கமோ இல்லை. இது மற்றுமொரு அரசியல் நிகழ்வாகும். எனவே, அரசாங்கம் இதனை ஓர் அரசியல் நடவடிக்கையாகக் கருத வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தனியாகக் கவனித்து, அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
காவி உடையை அணிந்துகொள்வதாலும், புத்தர் சிலையொன்றை முன்னிறுத்திப் போராட்டம் நடத்துவதாலும் ஒரு நடவடிக்கை பௌத்த நடவடிக்கையாகிவிடாது. புத்த தர்மம் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பையும் கருணையையும் வளர்ப்பதுடன், வெறுப்பையும் சாபமிடுதலையும் நிராகரிக்கிறது. எனவே, பலி பூஜைகள் மற்றும் சூனியச் செயற்பாடுகளைப் பௌத்தத்துடன் தொடர்புபடுத்துவது தவறானதாகும்.
இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்