தனது திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் வீட்டின் கதவுகளை பூட்டி வைத்துள்ளதாகவும், தம்மால் வீட்டுக்குள் நுழைய முடியாதுள்ளதாகவும் இளைஞன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளதால் ஏணியின் மூலமே மனைவியை வீட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டியுள்ளதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை- உகன பிரதேசத்திலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இளைஞன் திருமணம் முடித்துள்ளார். பதுளையை சேர்ந்த யுவதியுடன் ஏற்பட்ட பேஸ்புக் காதலையடுத்து, திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி கடந்த மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதியினர் வீடு திரும்பியபோது, வீட்டின் சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன. தந்தையும், சகோதரிகளும் கதவை பூட்டி விட்டு உள்ளேயிருந்து விட்டனர்.

நானும் என்னுடைய மனைவியும் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கின்றோம். அங்குச் செல்வதற்கு வீட்டுக்கு வெளியே படிகள் இல்லை. நான், எனது மனைவியும் வெளியே சென்றுவர வசதியாக வீட்டின் கதவுகளை திறந்து வைக்க ஏற்பாடு செய்யுமாறு இளைஞன் பொலிசாரிடம் கோரியுள்ளார்.