உலக புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை (A. R. Rahman) மிஞ்சி ஒரே ஒரு பாடலின் மூலம் உலகளவில் பிரபலமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, (Yohani de Silva) சாதனை படைத்துள்ளார்.
யூரியூப் தளங்களில் சந்தாதாரர்களின் (subscribers) அடிப்படையில் இந்த சாதனையை யொஹானி படைத்துள்ளார்.
அண்மையில் மெனிகே மகே ஹித்தே பாடலின் மூலம் பிரபல்யம் அடைந்தார். பின்னர் இந்த பாடல் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வடிவமைக்கபட்டு அதிலும் பெரும் வரவேற்பை பெற்றார். இதன்மூலம் அவருக்கு ரசிகர்கள் வரவேற்புகள் குவிந்தன.
இந்நிலையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் யூரியூப் தளங்களில் மொத்த சந்தாதாரர்கள் 2.93 மில்லியன்களாகும். இலங்கையின் இளம் பாடகியான யொஹானியின் யூரியூப் தளங்களில் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.96 மில்லியனாக அதிகரித்துள்ளது. மெனிகே மகே ஹித்தே பாடலின் மூலம் குறைந்த நாட்களில் அதிக சந்தாதாரர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்