” அரசுக்குள் இருந்துகொண்டு இரட்டை வேடம் போட வேண்டாம். அரசை விமர்சிப்பதாக இருந்தால் அரச கூட்டணியில் இருந்து வெளியேறுவதே உகந்த செயலாக இருக்கும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 இல் அப்பம் சாப்பிட்டுவிட்டு இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் தாவியவர்களை மறக்கமாட்டோம். இந்த அரசு சரியில்லையென நினைத்தால், அரசிலிருந்து வெளியேறி எதிரணி பக்கம் அமர்வதே சிறப்பு.

நல்லாட்சி எனக்கூறிக்கொண்டு ரணிலுடன் சென்றனர். இன்று ரணில் தரப்பே இவர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது. ஊருக்குச்சென்று கட்சியைப் பலப்படுத்துங்கள். ஆனால் அரசுக்குள் இருந்துகொண்டு டகள் கேம் ஆடவேண்டாம்.” – என்றார்.