” அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை குப்பைக் கூடையில் போடுங்கள். 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள செயற்படுத்துங்கள்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடு இக்கட்டான நிலையில் உள்ளது. நெருக்கடி மேலும் உக்கிரமடையும். எனவே, இந்நிலைமையை சமாளிப்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
இவ்வாறான நிலைமை ஏற்படும், இவற்றை செய்யுங்கள் என முன்கூட்டியே அரசுக்கு ஆலோசனை வழங்கினோம். ஆனால் அரசு எதனையும் செய்யவில்லை.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் என்ற வகையில், அதனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைக்கின்றேன். முடிந்த விரைவில் 20 வது திருத்தச் சட்டத்தை குப்பைக்கு கூடைக்குள் போடுங்கள்.
19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுப்போம். அதனை செய்ய வேண்டியது அவசியம். 19வது திருத்தச் சட்டத்தின் கீழேயே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை கிடைத்தது. 20வது திருத்தச் சட்டத்தின்படி செயற்பட அவருக்கு மக்கள் ஆணையில்லை. உரிமையும் இல்லை. ” – என்றார்.
இணைந்திருங்கள்