இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரின் இராஜினாமாவின் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கியுள்ளது.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய BASL ஜனாதிபதி சட்டத்தரணி (PC) சாலிய பீரிஸ், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதலில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பான கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும்.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவால் பதவியேற்க முடியாவிட்டால், சபாநாயகரே ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாகப் பதவியேற்பார் என பி.சி.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

அந்த மாதத்திற்குள், முன்னாள் ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் 50% வாக்குகளைப் பெற வேண்டும்.

பிரதமர் விக்ரமசிங்க மற்றும் அவரது பதவி விலகல் தொடர்பில், அவர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டும் எனப் பிசி பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எந்தக் காலதாமதமுமின்றி தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று பிசி பீரிஸ் வலியுறுத்தினார், இலங்கை நீண்ட காலத்திற்கு நிலையற்றதாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.