இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பினால் சமூக அமைதியின்மை பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சமூக அமைதியின்மை மூலம் மீண்டும் ஒரு கிளர்ச்சியான சமூகப் போக்கு உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.

“பேபி” மார்களால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் விமல் எம்.பி சுட்டிக்காட்டினார்.

கடந்த அமைச்சரவையில் மூன்று ராஜபக்ஷர்கள் மட்டுமே இருந்தாக குறிப்பிட்ட அவர், இம்முறை அது ஐந்தாகும் என்றும் குறிப்பிட்டார்.