நிதி அமைச்சருக்கும், தனக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை – என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது, மத்திய வங்கி ஆளுநரை சந்திப்பதற்குகூட நிதி அமைச்சர் நேரம் ஒதுக்குவதில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆளுநர்,

” அவ்வாறு எந்த விரிசலும் இல்லை. நாட்டுக்கு தேவையான திட்டங்கள் உரிய வகையில் வகுக்கப்பட்டுவருகின்றன.” – என்றார்.