முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை தான் கேட்கவில்லை எனவும் அது குறித்து தேடி அறிய எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி:- முன்னாள் நிதியமைச்சர் நேற்றைய தினம் உங்களை கடுமையாக விமர்சித்துள்ளாரே?

பதில்:- யார்?

கேள்வ:- ரவி கருணாநாயக்க

பதில் :- என்ன கூறியுள்ளார்.? எனக்கு தெரியாது.

கேள்வி:- உங்களது கோப்புகள் அவரிடம் இருக்கின்றனவாம்?

பதில்:- நான் கேட்கவில்லை. நான் இரத்தினபுரியில் இருந்து இரவே வந்தேன். என்ன என்று நானும் தேடிப்பார்க்க வேண்டும்.

கேள்வி:- எதிர்காலத்தில் உங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட போவதாக ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

பதில்:- இந்த அரசியல் உலகத்தில் அதிகமான நெருக்கடிகள். சரியான குழப்பம். இதனால், அவை சாதாரணமானவை. அவை பிரச்சினைகள் அல்ல. நாங்கள் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.

கேள்வி:- முன்னாள் நிதியமைச்சரே இதனை கூறியுள்ளார்.

பதில்:- சரி, சரி.சரி எவரும் கூறட்டும், எதனையும் கூறட்டும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த சவாலை விடுத்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கருத்துகளை வெளியிட்டதுடன், ரவி கருணாநாயக்கவையும் மறைமுகமாக சாடியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ரவியால் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைத்திரியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோகம் உட்பட சில விடயங்கள் தொடர்பில் ஏழு ஆவணங்களை ரவி கருணாநாயக்க முன்வைத்தார்.

அவற்றில் தவறு இருக்கின்றதெனில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

இதற்கு தற்போது மைத்திரி பதிலடி கொடுத்துள்ளார்.